ஸ்டாலினும் இலவு காத்த கிளியும் ஒன்னு- பொன். ராதா கிருஷ்ணன் காமெடி....

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என இலவு காத்த கிளி போல் காத்திருக்கிறார் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினை பொன்.ராதா கிருஷ்ணன் கலாய்த்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் எதிரணியை கடுமையாக விமர்ச்சித்தும், கலாய்த்தும் வருகின்றன. தி.மு.க.தலைவர் ஸ்டாலின் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பா.ஜ. வேட்பாளர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கடுமையாக சாடினார்.

இதற்கிடையே மு.க.ஸ்டாலினை பொன்.ராதா கிருஷ்ணன் கடுமையாக கலாய்த்து தள்ளினார். பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என இலவு காத்த கிளி போல் காத்திருக்கிறார் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்தார்.

அது என்ன இலவு காத்த கிளி அது எப்படி வந்ததுன்னு பார்ப்போம். கிளி ஒன்னு இலவமரத்துல ரொம்ப நாளா குடியிருந்துச்சு. அந்த மரத்துல பூக்கும் பூவ பாத்துட்டு அது காயாகி அப்புறம் பழமா மாறிய பிறகு சாப்பிடலாம் என்ற ஆசையுடன் ரொம்ப நாளா காத்திட்டு இருந்தது. ஒரு நாள் அந்த இலவம்பஞ்சு பழம் வெடிச்சு அதிலிருந்து பஞ்சு வந்ததை பார்த்த கிளி ஏமாந்து போச்சுன்னு. ஒருவர் ரொம்ப நாளா நடக்கும் என்று நினைத்து கொண்டு இருந்த காரியம் நடக்காமல் போனால் அவரை கிண்டல் செய்வதற்கு இலவு காத்த கிளியை உதாரணப்படுத்தி சொல்வார்கள்.

 

ஏழை மாணவர்களும் மருத்துவராக ‘நீட்’ தேர்வு அவசியம் –சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

More News >>