முஸ்லீம்களை தாக்க ஆயுதங்களுடன் சென்ற பாஜக இளைஞர் அமைப்பு - வெளியானது வீடியோ

ஏபிவிபி கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் ஆயுதங்களுடன் சென்று இஸ்லாமியர்களைத் தாக்கினார்கள் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் குடியரசு தினவிழாவையொட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)அமைப்பை சேர்ந்தவர்கள் காஸ்கன்ஞ்சில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, ராகுல்உபாத்யாய் என்ற ஹிந்து இளைஞரை இஸ்லாமியர்கள் அடித்துக்கொன்று விட்டதாகவும் கூறி பெரும் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றினர். இஸ்லாமியர்களின் சொத்துக்களை சூறையாடினர். வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தான் குப்தா (22) என்ற இளைஞர் உயிரிழந்தார். ஆனால், சந்தான் குப்தாவிற்கு இறுதிச்சடங்கு நடந்தபோது மீண்டும் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து தடியடி நடத்திய போலீசார், 140-க்கும் அதிகமானோரை கைது செய்தனர்.

இதனிடையே, இஸ்லாமியர்கள் தான் வன்முறையைத் தூண்டியதாக, பொய்யான குற்றச்சாட்டை வி.எச்.பி. - ஏ.பி.வி.பி. கும்பல் வைத்தது. அவர்கள் தான் தங்களைத் தாக்கியதாகவும் கூறினர். ஆனால், இஸ்லாமியர்களால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட ராகுல் உபாத்யாய் உயிரோடு வந்தார்.

தான் கொல்லப்படவில்லை என்றும், சொல்லப்போனால், வன்முறை நடந்த பகுதியிலேயே தான் இல்லை என்றும் அவர் கூறினார். இதன் மூலம் காஸ்கன்ஞ் சம்பவம், இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்திய வன்முறை என்பது அம்பலமானது.

தற்போது சங்-பரிவாரத்திற்கு எதிரான மற்றுமொரு ஆதாரம் வெளியாகியுள்ளது. இஸ்லாமியர்கள்தான் தாக்கினார்கள் என்று கூறப்பட்ட நிலையில், அதற்குமாறாக, விஎச்பி - ஏபிவிபியை சேர்ந்தவர்கள் துப்பாக்கிகள், வாள் மற்றும் பிற ஆயுதங்களுடன் இஸ்லாமியர்கள் குடியிருப்புக்குள் நுழையும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த வீடியோ மோதல் வெடிப்பதற்கு முன்னதாக தாசில்தார் அலுவலகத்திற்கு மேல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இது வன்முறைக்கு யார் காரணம் என்பதை மேலும் தெளிவு படுத்தியுள்ளது.

More News >>