மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து உதைத்து பன்றிக்கறி உண்ண வைத்து அட்டூழியம்

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த செளகத் அலி,68, என்பவரை ஞாயிறன்று ஒரு கும்பல் அடித்து உதைத்து பன்றிக்கறி உண்ணவைத்து அட்டூழியம் செய்துள்ளது.

இஸ்லாமியரான 68 வயது முதியவர் செளகத் அலி, அசாம் மாநிலத்தில் உள்ள பிஸ்வநாத் மாவட்டத்தில் கடந்த ஞாயிறன்று மாட்டுக்கறி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது, அங்கே சென்ற கும்பல் ஒன்று, மாட்டுக்கறி விற்பதற்காக அவரை அடித்து உதைத்து, முட்டிப் போடவைத்து, பன்றிக் கறியை உண்ண வைத்து அட்டூழியம் செய்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

செளகத் அலியை அடித்து உதைத்த கும்பல், நீ வங்க தேசத்தைச் சேர்ந்தவனா என்றும் உனது பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ளதா? எனவும் கேள்விகளை எழுப்பியதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கிடப்பட்டு, இந்தியர்கள் அல்லாதவர் வெளியேற்றப்படுவர் என்ற வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிஸ்வாநாத் மாவட்டம் தெஸ்பூர் மக்களவித் தொகுதிக்கு உட்பட்டது. அங்கு நாளை மறுநாள் ஏப்ரல் 11-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

 

''அரசர் நிர்வாணமாக திரிகிறார்!'- மோடி மீது ராகுல் தாக்கு

More News >>