இன்று தமிழகம் வருகிறார் மோடி -மீண்டும் ட்ரெண்டிங்கில் #gobackfascistmodi

தமிழகம் வரும் மோடியின் வருகையை எதிர்க்கும் #gobackfascistmodi, #Gobackmodi, ஆகிய  ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.  

மக்களவைத் தேர்தல் திருவிழா உச்சக் கட்டத்தை எட்டிவிட்டது. நாடு முழுவதும் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில்,  தேர்தல் பரப்புரைக்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோவை வருகிறார். அதிமுக கூட்டணியுடன் கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனை ஆதரித்து, கொடீசியா மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்கிறார்.

தமிழகம் வரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு வழக்க கட்சியினர்  ஏற்பாடுகளைத் தீவிரமாகக் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #Gobackmodi, #goback  fascist modi  ஆகிய  ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்ட போஸ்ட்களில் மத்திய அரசைக் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 1 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கினர். ஆனால், வேலையில்லா திண்டாட்டம் தலை தூக்கி விட்டதாக #gobackfascistmodi  என்ற பதிவின் கீழ் புகார்கள் கூறப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக, தமிழகம் வரும்  பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து    ட்விட்டர் ட்ரெண்டிங்கில்ட் #Gobackmodi முதலிடம் பிடித்து விடுகிறது. உலக அளவிலும் ட்ரெண்டிங்கில்ட் முதலிடம் பிடித்த கதையும் உண்டு. 

 

நாங்க ஆட்சிக்கு வந்தா இலவசமாக போன்ல பேசலாம்- மோடி வாக்குறுதி....

More News >>