பாசக்கார இந்தியர்கள்.. தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம்!

உலகளவில் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

உலகின் எந்த நாட்டுக்கு சென்றாலும், அங்கு பல இந்தியர்கள் தலைமை பணி முதல் கடைநிலை ஊழியர் என ஏதாவது ஒரு பணியை செய்துக் கொண்டிருப்பர்.

125 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நாடு, என்பதால், குடும்பத்தை முன்னேற்றும் நோக்கத்துடன், பல இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

அவர்கள், அங்கு சம்பாதிக்கும் பணத்தில் 60 சதவீதக்கும் மேற்பட்ட தொகையை இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டில் 79 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை இந்தியாவிற்கு வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பியுள்ளனர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. 67 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலகின் பல பகுதியில் வேலை பார்க்கும் சீனர்கள் கடந்த ஆண்டு அனுப்பியுள்ளதாக உலக வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், 36 பில்லியன் டாலர்களுடன் மெக்சிகோ 3வது இடத்திலும், 34 பில்லியன் டாலர்களுடன் பிலிப்பைன்ஸ் 4வது இடத்திலும், 29 பில்லியன் டாலர்களுடன் எகிப்து 5வது இடத்திலும் உள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு அதிக வருமானம் வருகிறது. மேலும், 2016, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகள் என தொடர்ந்து 3 ஆண்டுகளும் இந்த பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்வு!

More News >>