சூர்யாவின் புதுப்பட ஷூட்டிங் தொடங்கியாச்சு
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.
செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படமும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படமும் சூர்யாவுக்கு அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இவ்விரு படங்களுமே இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இதில் என்.ஜி.கே. வருகிற மே மாதம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. என்.ஜி.கே. படத்துக்கான டப்பிங் வேலைகளை முடித்து கொடுத்துவிட்டார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார் சூர்யா. சூர்யாவின் 38வது படமான இதன் பட பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடிக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவை புது லுக்கில் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள் படக்குழுவினர். தவிர, படத்தின் பெரும்பாலுமான படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடக்கவிருக்கிறது. படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும், சீக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக ஜாக்கி பணியாற்றுகிறார். படத்தொகுப்பிற்கு சதீஷ் சூர்யாவும், உடைகளுக்கு பூர்ணிமா ராமசாமியும் பொறுப்பேற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவழியாக என்.ஜி.கே ரிலீஸ் தேதி அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்