பாலிவுட் நடிகையின் குத்தாட்டப் பாடலில் அஜித்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் பிங்க் பட ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்பொழுது நடந்துவருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகையும் இணைந்துள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் தற்பொழுது அஜித் நடித்துவரும் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புடொடக்‌ஷன் பணிகள் தற்பொழுது நடந்து வருகிறது. தமிழுக்கு ஏற்றதுபோல படத்தில் பல காட்சிகளை இணைத்துள்ளார் இயக்குநர். குறிப்பாக இந்தியில் அமிதாப்பச்சனின் மனைவி கேரக்டருக்கு பெரிய காட்சிகள் இருக்காது. ஆனால் தமிழில் வித்யாபாலன் நடிப்பதால் ப்ரத்யோகமாக சில காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின் நடனமாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குத்தாட்டம் போடவைக்கும் இப்பாடலில் அஜித், ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் இருக்கிறார்களாம்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவின் கணவர் போனிகபூர் தயாரித்துவருகிறார். ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

 

அமைதியாக படப்பிடிப்பை முடித்த படக்குழு - நேர்கொண்ட பார்வை முக்கிய அப்டேட்

More News >>