அடுத்த பிரதமர் யார்? -மோடிக்கு அதிகரிக்கும் செல்வாக்கு, சரிவில் ராகுல் காந்தி

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த புல்வாமா, பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு மக்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற ரேசில் நரேந்திர மோடி, ராகுல் இருவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு தொடங்குகிறது. இன்று மாலையுடன் முதற்கட்ட பிரசாரமும் நிறைவடைகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன் வகையில், ஐஏஎன்எஸ் சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம், சிவோட்டர்ஸ் நிறுவனம் இணைந்து கடந்த ஜனவரி முதல் கருத்துக்கணிப்பைத் தொடங்கியது. இதில், இந்தியாவின் அடுத்த பிரதமர் யாராக இருக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பம் குறித்து, சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பேரிடம் கருத்துக்கணிப்பை நடத்தியது ஐஏஎன்எஸ் சி வோட்டர்ஸ்.

கருத்துக்கணிப்பு தொடக்கத்தில், ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி ராகுல் காந்திக்கு 38 சதவீத மக்கள் ஆதரவு அளித்திருந்தனர், மோடிக்கு 51 சதவீத மக்கள் மீண்டும் இரண்டாவது முறையாகப் பிரதமர் மோடி பதவியேற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். ஆனால், தற்போது, வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செல்வாக்கு சரிந்துள்ளது. அதே சமயம், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

அதோடு, பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு நடத்திய கருத்துக்கணிப்பில், மோடிக்கு ஆதரவாக 57.84 சதவீத பேரும், ராகுல் காந்திக்கான ஆதரவாக 31.08 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். விமானப்படை வீரர் அபிநந்தன் விடுதலைக்குப் பிறகு மக்கள் மத்தியின் மோடியின்  செல்வாக்கு மிகவும் அதிகரித்தாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா, பாலகோட் உள்ளிட்ட தாக்குதலுக்கு பிறகும், அபிநந்தன் விடுதலைக்கு பிறகும், மோடியின் செல்வாக்கு 60 சதவீதமாக அதிகரித்து உள்ளது. ராகுல் காந்தியின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால், மோடிக்கும் ராகுலுக்கும் இடையிலான சதவீதம் இடைவெளி மிக அதிகமாக இருப்பதால், பிரதமர்க்கான போட்டியில் நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார் என முடிவில் தெரியவந்துள்ளது.

 

மன்மோகன் சிங்கின் பயண கட்டணம் அதிகரித்தது எப்படி? - ஏர் இந்தியா பில்லும்.... மோடியின் ஐடியாவும்...

More News >>