கருப்பு சட்டை அணிந்தவர்களை விரட்டியடிக்கும் போலீஸ்hellip கோவையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியை முன்னிட்டு அராஜகம்!

கோவை கொடிசியா மைதானத்தில் தற்போது பிரதமர் மோடி பங்கேற்றுள்ள பாஜக பிரசாரக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்திற்காக காலை முதலே கோவை முழுவதும் போலீஸ் சோதனை அதிகரிக்கப்பட்டு, சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கெடுபிடிகள் அரங்கேறின. கொடிசியா மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் மாற்றிவிடப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

கடந்த மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக, கருப்பு நிற டி-சர்ட் அல்லது சட்டை அணிந்த நபர்களுக்கு கொடிசியா மைதானத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

மீடியா நபர்களோ அல்லது பொதுமக்களோ சாதாரணமாக கருப்பு சார்ந்த உடை அணிந்து சென்றாலோ அவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டு, போலீசார் அவர்களை திருப்பி அனுப்பிய அராஜகங்கள் அரங்கேறின.

சில செய்தியாளர்கள் நிகழ்ச்சிக்கு செல்ல உரிய பாஸ் வைத்திருந்தும், அவர்கள் கருப்பு சட்டை அணிந்த ஒரே காரணத்திற்காக அவர்களை போலீசார் திருப்பி அனுப்பி அட்டூழியம் செய்துள்ளனர்.

மோடி தமிழகம் வருவதைத் தொடர்ந்து இன்றும், உலகளவில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் காலை முதலே ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

More News >>