ஆண்கள் கட்டாயமாக 2வது திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்: எரித்திரியா நாட்டில் புதிய சட்டம்

அஸ்மாரா: ஆண்கள் கட்டாயமாக இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யாவிட்டால் சிறைத்தண்டனை நிச்சயம் விதிக்கும் புதிய சட்டத்தை எரித்திரியா நாட்டில் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டால் மத ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அது குற்றமாக கருதப்படுவர். ஆனால், வடகிழக்கு ஆப்பரிக்கா நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளாவிட்டால் சிறை தண்டனை விதிக்கும் அளவிற்கு குற்றமாக கருதப்படுகிறது.

ஆம். எரித்திரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

செங்கடலை ஒட்டி அமைந்துள்ள இந்நாட்டில் அடிக்கடி போர் நடைபெறும். போர்களில் ஆண்கள் பலர் இறந்துவிடுகின்றனர். இதனால், அந்நாட்டில் ஆண்களின் சதவீதத்தைவிட பெண்களின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனை சரிகட்ட, ஆண்கள் கட்டாயமாக இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், இரண்டாவது திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது சட்டம்.

இந்த புதிய சட்டம் அந்நாட்டில் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>