அடடே.. கோவக்காய் வறுவல் ரெசிபி

உடலுக்கு நன்மை தரும் கோவக்காய் வறுவல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கோவக்காய் - அரை கிலோ

கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு - 2 டேபிள் ஸபூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கோவக்காயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

பிறகு, கோவக்காயுடன் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அத்துடன், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும்.

பின்னர் கடலை மாவு, அரிசி மாவுடன் தண்ணீர் தெளித்து மீண்டும் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலா கலவையுடன் உள்ள கோவக்காயை பொறித்து எடுக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான கோவக்காய் வறுவல் ரெடி..!

More News >>