அபின் பயிரிட அனுமதி தந்தாதான் ஓட்டு- அடம்பிடிக்கும் பஞ்சாப் விவசாயிகள்...
போதை வஸ்தான அபின் செடியை விளைச்சல் செய்ய அனுமதி அளித்தால்தான் உங்களுக்கு ஓட்டு போடுவோம் என பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நாளை முதல் தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள சின்ன கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பெரும் தலைவர்கள் எல்லாம் இதுவரை செல்லாத பகுதிகளுக்கு எல்லாம் சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்திலும் மக்களவை தேர்தல் களை கட்டியுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள சங்ரூர் பகுதி விவசாயிகள் புதிய கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.வேற ஒன்னும் இல்லீங்க, அரிசி, கோதுமை போன்ற பயிர்களை விளைச்சல் செய்ற மாதிரி போதை வஸ்தான அபின் செடியையும் சட்டப்பூர்வமாக விளைச்சல் செய்ய அனுமதி வாங்கி தருவோம்ன்னு சொல்றாங்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவோம் என அந்த விவசாயிகள் கூறுகின்றனர்.
கஞ்சா, அபின் பயிரிட தடை உள்ள நிலையில், விவசாயிகளின் இந்த கோரிக்கையால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் எதுவும் பேசமுடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.