ஃபார்முலா ஒன் ரேஸ் காரெல்லாம் ஓரம்போ.. வருகிறது இந்திய நிறுவனத்தின் மின்னல் வேக கார்!

மஹிந்திரா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஆட்டோமொபைலி பினின்ஃபரினா தயாரித்துள்ள பினின்ஃபரினா படிஸ்டா கார் ஃபார்முலா ஒன் பந்தய கார்களை விட அதிவேகமாக செல்லக் கூடிய மின்சாரக் காராக உருவாகியுள்ளது.

இந்தியாவின் பிரபல மோட்டார் நிறுவனமான மஹிந்திரா கடந்த 2015-ம் ஆண்டு இத்தாலியிலுள்ள Automobili Pininfarina கார் தயாரிக்கும் நிறுவனத்தை கைப்பற்றியது.

இத்தாலியிலுள்ள இந்த Automobili Pininfarina நிறுவனம் தற்போது உலகின் அதிவேக மின்சார காரினை உற்பத்தி செய்துள்ளது. Pininfarina Battista எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த கார், ஃபார்முலா ஒன் பந்தயங்களில் பயன்படுத்தக் கூடிய அதிவேக கார்களை விட மின்னல் வேகத்தில் சீறிப் பாயும் திறன் பெற்றது என அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஜெனிவாவில் சமீபத்தில் நடைபெற்ற மின்சார சொகுசு கார்களின் கண்காட்சியில் படிஸ்டா கார் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபார்முலா ஒன் பந்தயங்களில் பயன்படுத்தக் கூடிய அதிவேக கார்கள் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும். ஆனால், 2020-ம் ஆண்டு சந்தைக்கு வரவுள்ள இந்த படிஸ்டா சொகுசு கார் மணிக்கு 350 கி.மீ.,வேகத்தில் எந்த தங்கு தடையும் இன்றி சீறிப் பாயும் என்கின்றனர்.

இந்த கார் புறப்பட்ட 2 விநாடிகளில் 100கி.மீ., எனும் டாப் ஸ்பீட் வேகத்தை நெருங்கி பறக்கும் திறன் வாய்ந்தது.

மேலும், முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்கும் கார் என்பதால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

120 கிலோ வாட் லித்தியம், அயன் பேட்டரி கொண்டு இயங்கும் இந்த மின்னல் வேக கார் 1,900bhp திறன் கொண்டது.

மேலும், பிரத்யேகமான சொகுசு கார் என்பதால், வெறும் 150 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பெருங் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்படும் என்றும் Automobili Pininfarina அறிவித்துள்ளது.

More News >>