ரஜினியின் தர்பாருக்கு பூஜை போட்டாச்சு
ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் முதற்கட்ட தயாரிப்புப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வந்தது. இன்று முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்குவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் பூஜையும் மும்பையில் இன்று நடைபெற்றுள்ளது.
பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இது ரஜினியின் 167வது படம். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குவதால், படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பை நேற்று படக்குழு வெளியிட்டது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் ஒப்பந்தமாகியுள்ளனர்.
இன்று படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெற்றது. பூஜையில் நடிகர் ரஜினிகாந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தர்பார் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியின் முதல் படம் என்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.