அட்லீயை கிண்டல் செய்த நிறவெறியர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த சரியான பதிலடி

சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் நடந்து முழுவீச்சில் நடந்து வருகிறது. படத்திற்காக பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்றும் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக ஒரு செய்தியும் பரவியது. இந்நிலையில் அட்லீ - ஷாருக்கான் ஒன்றாக அமர்ந்து ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் அட்லீ மீது நிறவெறி கமெண்டுகளும் வீசப்பட்டு வருகின்றன.

அட்லீயும் ஷாருக்கானும் அருகருகில் அமர்ந்த புகைப்படத்தை பகிர்ந்து பலர், அட்லீயின் நிறத்தை கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

`அட்லீ உழைப்பாலும் திறமையாளும் இன்று ஷாருக்கானுக்கு இணையான அந்தஸ்தை பெற்று அவர் அருகில் அமர்ந்து மேட்ச் பார்க்கிறார். ஆனல் நீங்கள் வெட்டியாக அவரின் நிறத்தை கிண்டல் செய்கிறீர்கள்’`நிறவெறியர்களே நீங்கள் அட்லீக்கு கால் தூசிக்கு சமம் இல்லை. அவர் பெரிய நட்சத்திரங்களை இயக்கி வருகிறார். நீங்களோ ஒன்றுக்கும் உதவாமல் ட்விட்டரில் கதை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்’

இவ்வாறு அட்லீயை கிண்டல் செய்தவர்களுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More News >>