`அஜித் நடிப்பு பிரமாதம்.. ஓகே சொன்னால் 3 ஆக்zwnjஷன் கதை இருக்கு... பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஓபன் டாக்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்பொழுது நடித்துவரும் நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் தற்பொழுது அஜித் நடித்துவரும் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்கள் பண்ண அஜித் உறுதியளித்திருப்பதாக முன்னர் செய்திகள் வெளியாகின. படப்பிடிப்பின் போது போனி கபூர் அஜித் நடிப்பை பார்த்து வியந்துள்ளார். ஏற்கெனவே, 'விஸ்வாசம்' படத்தின் முதல்நாள், முதல் காட்சியைப் பார்த்து வியந்துள்ளார் போனிகபூர்.

இந்நிலையில் 'ஹெப்டா - தி லாஸ்ட் லெக்சர்' என்ற எகிப்து படத்தின் ரீமேக் உரிமையை போனிகபூர் வாங்கியுள்ளார். அஜித் சம்மதித்தால் அந்த படத்தையும் தானே தயாரிக்கத் தயாராக இருக்கிறாராம் போனி கபூர். இன்று ட்விட்டரில் அஜித்தை குறித்து பதிவிட்ட போனி கபூர், ``நேர்கொண்ட பார்வை படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன். அஜித்தின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. அவர் விரைவில் இந்தியில் படம் நடிப்பார் என நம்புகிறேன். என்னிடம் மூன்று ஆக்‌ஷன் கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு கதைக்காவது அஜித் ஓகே சொல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.

 

More News >>