வைரல் வீடியோ: பெண்ணின் கண்ணுக்குள் சென்று கண்ணீரை குடித்து வாழ்ந்த 4 தேனிக்கள்!
வைரலாகும் இந்த வீடியோ, ஏதோ ஒரு பேய் படத்தின் காட்சியல்ல.. உண்மையிலையே தைவான் நாட்டை சேர்ந்த ’ஹி’ எனப்படும் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையான சம்பவம் தான். ஆனால், மருத்துவர்களின் சாதுர்யத்தால், தற்போது அவர், தனது 80% பார்வைத் திறனை மீட்டுள்ளார்.
கண்ணுக்குள் 4 தேனிக்கள் எப்படி போகும் என நினைப்பவர்களுக்கு, ஹாலிக்டே அல்லது வியர்வை தேனிக்கள் என அழைக்கப்படும் மிக நுன்னிய தேனிக்கள் தான் அந்த பெண்ணின் கண்ணுக்குள் சென்றுள்ளது. மேலும், இவை மலை பிரதேசங்களிலும், இடுகாடுகளிலும் அதிகம் காணப்படும்.
சமீபத்தில், இறுதி ஊர்வலத்திற்கு சென்ற ஹி திரும்பி வரும் போது, அவரது கண் வீங்கிப் போனதை உணர்ந்தார். உடனடியாக ஃபூயின் பல்கலை மருத்துவமனைக்கு விரைந்த அவரை சோதனை செய்த டாக்டர் ஹங் சி-டிங், உலகத்தில் இதுவரை யாருக்கும் இதுபோன்ற நிகழ்வு நேர்ந்ததில்லை என்று திகைத்தார்.
5 நாட்கள் தொடர் போராட்டத்தின் முடிவில், வெற்றிகரமாக அந்த பெண்ணின் கண்ணுக்குள் உயிருடன் இருந்த அந்த 4 தேனிக்களையும் அகற்றி, அப்பெண்ணின் பார்வையை மீட்டுக் கொடுத்துள்ளார்.
பெண்ணின் கண்ணுக்குள் சென்ற அந்த தேனிக்கள் அவரது கண்ணீரை குடித்து