இப்போது உண்மை வெளிவந்துவிட்டது மிஸ்டர் மோடி - காங்கிரஸ் கடும் சாடல்

இராணுவ வீரர்களை காப்பதற்கு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஒவ்வோர் மேடையாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் சிறப்பு சட்ட பிரிவுக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்து வருகிறார். இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கவர்ந்து விட்டதுபோள. இதனால் பாஜகவை ஆதரித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சி என்றால் பாகிஸ்தானுக்கு பயப்படும். பேச்சுவார்த்தை நடத்த வராது. ஆனால் பாஜக அப்படியல்ல. அது ஒரு வலதுசாரி கட்சி கிடையாது. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புண்டு எனப் பேசியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கருத்து குறித்து காங்கிரஸ் கட்சி பேசியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் கூறுகையில், பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக மோடியின் கூட்டணி அமைத்துள்ளது. மோடிக்கு போடும் ஒட்டு பாகிஸ்தானுக்கு அளிக்கும் ஓட்டு ஆகும்.

மோடி அவர்களே உங்களுக்கு முதலில் நவாஸ்செரீப் நண்பராக இருந்தார். தற்போது இம்ரான் கான் உங்களுக்கு சிறந்த நண்பராகி விட்டார். உண்மை இப்போது வெளிவந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.

 

மிகப்பெரிய பிரச்சனையே ‘ஓபிஎஸ் மற்றும் அவரது மகனும் தானாம்’ –கொந்தளிக்கிறார் ஈவிகேஎஸ்.இளங்கோவன்
More News >>