அனைத்து தடைகளையும் மீறி வசூல் சாதனை புரிந்த பத்மாவத் திரைப்படம்
சித்தூர் ராணி பத்மினியின் வரலாற்றைச் சொல்லும், ‘பத்மாவத்’ படம், சங்-பரிவாரங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே, நாடு முழுவதும் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியாகியது. படத்திற்கு அமோக வரவேற்பும் கிடைத்துள்ளது.
ஆனால், பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படம் வெளியாவதை மிரட்டி தடுத்துள்ள சங்-பரிவாரங்கள், ராஜ்புத் கர்னி சேனா, சத்ரிய சமாஜ் உள்ளிட்ட சாதிய அமைப்புக்களைத் தூண்டிவிட்டு வன்முறையையும் அரங்கேற்றின.
இந்நிலையில், அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து பத்மாவத் திரைப்படம் வசூல் சாதனை புரிந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 76.24 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், வடகொரியாவில் ஒரே நாளில் [ஜனவரி 27] 1.85 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. மேலும், முதல் நான்கு நாட்கள் வசூலில் அமீர்கானின் பிகே [3.56 மில்லியன் டாலர்] படத்தை முறியடித்து 4.9 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது.