11 ஆண்டுகளில் முதன்முறையாக கேப்டன் ரோகித் சர்மா இல்லாமல் களமிறங்கும் மும்பை அணி!

இன்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை அணிக்கு இன்றைய போட்டியில் கேப்டன் ஆகியுள்ள பொலார்ட், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 24வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 11 ஆண்டுகளில் முதன்முறையாக மும்பை அணியின் கேப்டன் இல்லாமல் அந்த அணி இன்றைய போட்டியில் விளையாடுகிறது.

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.

மும்பை அணியை எதிர்த்து விளையாடும் பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முன்னேறும் வாய்ப்பை பெறும்.

பஞ்சாப் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல், இன்றைய போட்டியிலாவது சிக்ஸர் மழை பொழிவாரா? என அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

 

`காயம்பட்டுருச்சு காசு கொடுங்க' - இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்ற படியேறிய ஸ்டார்க்
More News >>