யம்மி..மில்க்மேட் ஃப்ரூட் சாலட்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மில்க்மேட் ஃப்ரூட் சாலட் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாதுளம் பழம் - 1 கப்

அண்ணாச்சிப் பழம் - ஒரு கப்

ஆரஞ்சிப் பழம் - ஒரு கப்

சப்போட்டா பழம் - ஒரு கப்

திராட்சை - ஒரு கப்

சாத்துக்குடி - ஒரு கப்

ஆப்பிள் - ஒரு கப்

பால் - அரை லிட்டர்

மில்க்மேட்

வெண்ணிலா எசன்ஸ்

செய்முறை:

ஒரு பௌலில், பொடியா நறுக்கிய சப்போட்டா, திராட்சை, சாத்துக்குடி, ஆப்பிள், மாதுளம் பழம், ஆரஞ்சு, ஆண்ணாச்சிப் பழம் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.

பிறகு, கால் டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறவும்.

அத்துடன், காய்ச்சியப் பால் கொஞ்சம், மில்க்மேட் சேர்த்து நன்றாக கிளறவும்.

அவ்ளோதாங்க.. சுவையான மில்க்மேட் ஃப்ரூட் சாலட் ரெடி..!

More News >>