பொளந்து கட்டிய பொல்லார்ட்.. வீணானது கே.எல். ராகுலின் அதிரடி சதம்!
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றைய மேட்ச் பார்த்த ரசிகர்களுக்கு, அருமையான பிரியாணி விருந்தே காத்திருந்தது என்று சொல்லலாம். இரு அணிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு சிக்ஸர் மழை பொழிந்து தள்ளியது.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொலார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல். ராகுல் ஆடிய அதிரடி ஆட்டத்தை பார்த்த மும்பை ரசிகர்கள் எல்லாம். கேப்டன் ரோகித் சர்மா இல்லாததால், பொல்லார்ட் இந்த தவறான முடிவை எடுத்து விட்டார் என சபிக்கவே தொடங்கி விட்டனர். ஆனால், கடைசியில் வெற்றியை பொலார்ட் பெற்றுத் தந்த நொடியிலே அவருக்கு பாராட்டு மழை குவியத் தொடங்கி விட்டது.
கே.எல். ராகுல் அதிரடியாக ஆடி 64 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் விளாசி சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தால், அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல், 36 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசி 63 ரன்கள் எடுத்த நிலையில் பெஹண்டார்ஃப் பந்துவீச்சில் க்ருணால் பாண்டியாவிடம் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இந்த இருவரின் அதிரடி ஆட்டத்தால், 20வது ஓவர் முடிவில் வெறும் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 197 ரன்கள் என்ற ஸ்கோரை பஞ்சாப் அணி எட்டியது.
பஞ்சாப் அணியை போல சிறப்பான தொடக்கத்தை தராமல், மும்பை அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வந்தனர். 4வதாக களம் இறங்கிய கேப்டன் பொல்லார்ட், 31 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசி, 83 ரன்களை அதிரடியாக குவித்து, பஞ்சாப் அணியிடம் இருந்த வெற்றி வாய்ப்பை மும்பை அணி பக்கம் திருப்பிய நிலையில், ஆட்டமிழந்தார்.
20வது ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்து திரில் வெற்றியை பதிவு செய்தது.
ஆட்டநாயகனாக மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் தேர்வானார்.
`மும்பை; சென்னை அணிகளில் எது பெஸ்ட்?' - ஹர்பஜன் சொல்லும் பதில் இது தான்