தபால் ஓட்டுப்பதிவின் போது கும்பிடு போட்டது வினையானது- மதுரை அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் தபால் ஒட்டுப்பதிவின் போது அரசு ஊழியர்கள், காவல் துறையினரிடம் கும்பிடு போட்டு வாக்கு சேகரித்த விவகாரத்தில், அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினர், முன்கூட்டியே தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.மதுரையில் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் இதற்காக வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

நேற்று தபால் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கும் போது அங்கு திடீரென வந்த அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், கும்பிடு போட்டும், கை குலுக்கியும் தமக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனால் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டார் என்று எதிர்த்தரப்பில் புகார் செய்ய, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன்படி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது மதுரை செல்லூர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய விவகாம் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

 

போதிய நிதி இல்லையாம் –‘தெர்மாகோல் புராஜெக்ட்’ தோல்வி குறித்து செல்லூர் ராஜூ விளக்கம்
More News >>