ஆந்திராவில் இவிஎம் மெஷின் உடைப்பு ஜனசேனா வேட்பாளர் கைது
ஆந்திராவில் இன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் ஒருங்கே நடந்து வருகிறது. இந்நிலையில், ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, ஆத்திரத்தில் இவிஎம் எனப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தை உடைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதி ஆந்திராவில் இன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் ஒருங்கே நடந்து வருகிறது. இந்நிலையில், ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, ஆத்திரத்தில் இவிஎம் எனப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தை உடைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.குதிகளுக்கும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் ஜனசேனா கட்சியின் வேட்பாளர் மதுசூதன் குப்தா, தனது வாக்கை செலுத்துவதற்காக வருகைத் தந்தார்.
சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தொகுதிகள் சரியாக குறிப்பிடப்படவில்லை என தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் நடத்திய மதுசூதன், இவிஎம் மெஷினை இழுத்துத் தரையில் தள்ளினார். இதனால், வாக்குச்சாவடியில் பாதுகாப்புக்காக இருந்த போலீசார் உடனடியாக மதுசூதன் குப்தாவை கைது செய்தனர்.
காங்கிரஸா? பாஜகவா? 18 மாநிலங்கள்.. 2 யூனியன் பிரதேசங்களுக்கான மக்களவைத் தேர்தல் நாளை தொடக்கம்!