மீண்டும் முதல்வர் ஆவாரா? ஆந்திராவில் குடும்பத்துடன் வாக்களித்த சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவின் அமராவதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்களித்தார்.

நாடு முழுவதும் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மேலும், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் அடுத்த முதல்வர் யார் என தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற தேர்தலும் இன்று நடைபெற்று வருகிறது.

ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அமராவதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலையிலேயே தனது குடும்பத்தாருடன் வந்து மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டு வருகிறது.

வாக்குச்சாவடிகளில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது என்றும், இந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு வெற்றிப் பெற்று மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன

 

ராகுல் காந்தி வேணாம்..! சந்திரபாபு நாயுடு பிரதமராகணும்..!! தேவகவுடா பல்டி
More News >>