வன்முறை, வெறுப்பு, பயம் தேவையா? 2 கோடி வேலை வேண்டுமா? ராகுல்காந்தி ட்விட்
நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. முதல் கட்டமாக 91 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,
‘‘2 கோடி வேலை, வங்கிக் கணக்கில் 15 லட்சம் வாக்குறுதி இல்லை, நல்ல நாள் வாக்குறுதி இல்லை’’
இது வேண்டுமா அல்லது
‘‘வேலையின்மை, பணமதிப்பிழப்பு, கப்பார்சிங் டேக்ஸ்(ஜிஎஸ்டி), சூட்பூட் சர்க்கார், ரபேல், பொய், பொய், பொய், நம்பிக்கையின்மை, வன்முறை, வெறுப்பு, பயம்’’ - இது வேண்டுமா?இந்தியாவின் ஆன்மாவுக்கு வாக்களியுங்கள். அதன் எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள். புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார் ராகுல்காந்தி
உங்க வினை உங்களை சும்மா விடாது மோடி – ராகுல் காந்தி கடும் தாக்கு