தேர்தல் கமிஷனே விதியை மீறுவதா? அகிலேஷ் கண்டனம்!

நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தல் இன்று(ஏப்.11) நடைபெறுகிறது. முதல் கட்டமாக, 91 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் கமிஷனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதில், ‘‘நமோ தொலைக்காட்சிக்கும், மோடி திரைப்படத்திற்கும் தேர்தல் கமிஷன் தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம். அதே சமயம், ராணுவ வீரர்களின் படங்களை அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு போட்டு விட்டு, தேர்தல் கமிஷனே அவர்களின் படத்தைப் போட்டு எப்படி பிரச்சாரம் செய்யலாம்? அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்ற பிரச்சாரத்திற்கு தேர்தல் கமிஷனே ராணுவ வீரர்களி்ன் படத்தை போட்டது சரியா?’’ என்று கேட்டிருக்கிறார். அத்துடன், அந்த படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

 

பாஜக தேர்தல் அறிக்கை என்னாச்சு...தாமதத்திற்கு காரணம் இதுதானாம்
More News >>