சோனியா காந்தி, ஸ்மிரிதி இரானி இன்று வேட்பு மனுத் தாக்கல் அமேதியில் வெல்ல ஸ்பெஷல் பூஜை போட்ட ஸ்மிரிதி!
ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தியுடன் ரேபரேலியில் ஊர்வலமாக சென்று தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
மே 6ம் தேதி நடைபெற உள்ள 5ம் கட்ட மக்களவைத் தேர்தலின் போது சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் வெளியேறி பாஜகவில் இணைந்த தினேஷ் பிரதாப் சிங், சோனியா காந்திக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ளார்.
2004, 2006(இடைத்தேர்தல்), 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் சோனியா காந்தி அமோக வெற்றிப் பெற்றுள்ளார்.
சோனியா காந்தியை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள், அந்த தொகுதியில் தங்களது வேட்பாளர்களை களமிறக்கவில்லை.
ஆனால், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் ஸ்மிரிதி இரானியும் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
இதற்காக, கணவருடன் இணைந்து பிரத்யேக யாக பூஜையை ஸ்மிரிதி நடத்தி வருகிறார். யாக பூஜை முடிந்து பூரண கும்பம் பெற்றவுடன் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செல்ல ஊர்வலமாக செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இளம் பிரதமராக இன்னும் சில வாரங்களில் ராகுல் பொறுப்பேற்பார்: ஸ்டாலின் புகழாரம்