மின்னணு இயந்திரங்களில் கோளாறு..மறுதேர்தல் வேண்டும் -சந்திரபாபு நாயுடு கடிதம்

ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனக் கடிதம் எழுதியிருக்கிறார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.

(PC-ANI)

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு, சுமார் 92,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆனதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை என்றும் காலை 9:30 மணி வரை மின்னணு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக் கடிதம் எழுதியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

மேலும், மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மக்கள் வாக்களிக்காமல் திரும்ப சென்றுவிட்டனர். அதனால், வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சந்திரபாபு நாயுடு.

More News >>