உள்ளாட்சித் துறை ஊழல் குறித்து மு.க.ஸ்டாலின் பேசக்கூடாதாம்...!

அமைச்சர் வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

உள்ளாட்சித் துறை ஊழல், பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற அமைச்சர் வேலுமணியின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் பொள்ளாச்சி பகுதியில் பெண்கள் பலர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். அதே போல் அதிமுக அரசின் ஊழல்களையும் பட்டியலிட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பொள்ளாச்சி சம்பவம் முதல் முதல்வர் பழனிச்சாமி மற்றும் அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை விலாவாரியாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, உள்ளாட்சித் துறை அமைச்கள் வேலுமணிக்கு எதிராக அத்துறையில் நடந்த ஊழல்களைப் பற்றி கடுமையாக எடுத்துரைத்து வருகிறார். இந்நிலையில் தம் துறை சார்ந்த ஊழல்கள் மற்றும் பொள்ளாச்சி சம்பவம் பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு இடைக்கால தடை கோரி அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

More News >>