ரூ.15 லட்சம் வரும். ஆனா வராது- மோடியை நக்கல் அடித்த ஸ்டாலின்...
மோடி அறிவித்த ரூ.15 லட்சம் வரும் ஆனா வராது என அவரை ஸ்டாலின் கிண்டல் செய்தார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்னும் 7 நாட்களில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தனது கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
புதுச்சேரியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதனால் இன்று அங்கு சென்று காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை கடுமையாக கிண்டல் செய்து பேசினார்.
மு.க.ஸ்டாலின் அந்த கூட்டத்தில் பேசியதாவது: 5 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத மோடியை மோசடி என்று கூப்பிடுங்கள். அவர் அறிவித்த ரூ.15 லட்சம் வரும் ஆனா வராது. நாட்டுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண்பேடியால் கேடு. அந்த 3 பேரால் மக்களுக்கு தொல்லை. இவ்வாறு அவர் பேசினார்.