இன்னைக்கு இந்த பொண்ணு சொன்னதுதான் டிரெண்டிங்.....
மோடி எல்லாம் அப்புறம்தான் முதல்ல ஓட்டு போடுங்க. அப்புறம் அடுத்த வேலையை பாருங்க என உலகிலேயே மிகவும் குள்ளமான பெண்மணியான ஜோதி அமெஜ் பதிவு செய்த செய்திதான் தற்போது டிரெண்டிங்காக உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் வசித்து வருபவர் ஜோதி அமெஜ். 62.8 செ.மீட்டர் மட்டுமே உயரம் உள்ள ஜோதி அமெஜ் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண்மணி என கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர். குறைகளை சாதனைகளாக மாற்றும் தன்னம்பிக்கை மிக்க நபர்களில் ஒருவர்தான் இவர்.
உயரம் குறைவே ஜோதி அமெஜ்க்கு பெரும் புகழ் வர காரணமாக அமைந்து விட்டது. 2012ல் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், துருக்கி மற்றும் எகிப்து நாடுகள் தங்கள் சுற்றுலாத்துறை பிரபலப்படுத்துவதற்காக எகிப்தின் கிசா நகரில் பிரமிடுகள் முன்பு உலகின் உயரமான மனிதரான சுல்தான் கோசென் மற்றும் ஜோதி அமெஜ்யை வைத்து போட்டோ சூட் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஜோதி அமெஜ் இன்னைக்கு அவரது பேஸ்புக் பதிவு செய்த தகவல்தான் தற்போது வைரலாகி வருகிறது. அப்படி என்ன தகவல்ன்னு பார்க்கிறீங்களா? அவர் வசிக்கும் நாக்பூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதனால் காலையில் சீக்கிரமாக வாக்குசாவடிக்கு பெற்றோருடன் சென்று தனது வாக்கை பதிவு செய்துவிட்டு வந்தார்.
பின் தனது பேஸ்புக் கணக்கில், ஓட்டு போடுங்கள் என நாங்கள் ஒவ்வொருவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து முதல்ல ஓட்டு போடுங்க. அப்புறம் மத்த வேலையை பாருங்க என்று பதிவு செய்து இருந்தார். மேலும் வோட் என்று தலைப்பிட்டு, ஜோதி அமெஜ் ஒரு கையில் வாக்காளர் அடையாள அட்டையுடனும், ஓட்டு போட்டுதற்கான அடையாளமாக விரலில் வைக்கப்பட்ட மையை காட்டியபடியும் உள்ள 3 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுதான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.