மீண்டும் வரப்போகும் பிக் பாஸ்... கமல் கேட்ட சம்பளத்தால் தலைசுற்றிப்போன விஜய் டிவி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் விரைவில் துவங்க இருக்கிறது. இந்த முறை கமலுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
விஜய் டிவியின் வைரல் டிவி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இதன் முதல் சீசன் 2017, ஜூன் 25ல் துவங்கி நூறு நாட்கள் நடந்தது. பிறகு, இரண்டாம் சீசன் கடந்த 2018 ஜூன் 17ல் துவங்கி நூறு நாட்கள் ஒளிபரப்பானது. இவ்விரண்டு நிகழ்ச்சியையுமே கமல் தான் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த உரிமையை கொண்டிருக்கும் கலர்ஸ் நிறுவனம், மூன்றாவது சீசனை அவர்களின் கலர்ஸ் தமிழ் சேனலில் துவங்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான தயாரிப்பு வேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது. இந்நிலையில் கமலின் சம்பளம் தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
ஒரு நாளுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்காராம் கமல். இதனால் தொலைக்காட்சி தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறதாம். இருப்பினும், இறுதியில் கமல் சொன்ன தொகையை கொடுப்பார்கள் என்றே சொல்லப்படுகிறது. திரைப்படங்கள் தயாரிப்பில் விட்ட காசை பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டே நேர்செய்து வருகிறாரோ கமல் என்று சொல்கிறார்கள் திரைத்துறையினர்.