சூடான் அதிபரின் 30 ஆண்டுகால ஆட்சி கவிழ்ந்தது! மக்களின் எழுச்சிக்கு தூண்டுகோலானது ஓரு புகைப்படம்
சூடான் அதிபர் உமர் அல் பஷீரை அந்த நாட்டு ராணுவம் இன்று பதவியிலிருந்து அகற்றியது. அதிபருக்கு எதிராக நடந்த போராட்டத்தின் உத்வேகமாக ஒரு பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
சூடானில் கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொருளாதார நலிவு உள்ளிட்ட பல பிரச்னைகள் தலை தூக்கியது. இதற்கான எந்த நடவடிக்கையையும் அதிபர் உமர் அல் பஷீர் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
30 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய உமர் அல் பஷீருக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தது மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் உள்நாட்டு கலவரமாக மாறியது. இதனால், போராட்டக் காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் வெடித்து. இதில், அப்பாவி பொது மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் தலையிட்ட ராணுவம் ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதோடு, அதிபர் உமர் அல் பஷீரை ராணுவம் இன்று பதவியிலிருந்து அகற்றியது. இந்நிலையில், அதிபருக்கு எதிரான போராட்டத்திற்கு மிகவும் வலிமை கூட்டியதாகப் பெண் ஒருவரின் புகைப்படம் உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
போராட்டக்காரர்கள் மத்தியில், காரின் மேல் ஏறி நின்றிருக்கும் அப்பெண் தனது கையை உயர்த்தி விரலை நீட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் போராட்டக் காரர்களுக்கு மேலும் உத்வேகத்தை அளித்ததாக கூறப்படுகிறது. தற்போது, அந்த பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உயிருக்குப் போராடிய ஒரு கர்ப்பிணி தாயின் பாசப்போராட்டம்.. மாங்காய் மரத்தில் ஏறி குழந்தை பெற்ற அதிசயம்!