சொத்தை விற்று கடனை அடைப்பதா? - பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர் கேள்வி

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது என்பது சொத்தை விற்று கடனை அடைக்கும் செயல் என்று பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறியுள்ள அவர், ‘‘மோடி அரசு 1.5 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறி பதவிக்கு வந்தது. ஆனால், எந்தவித வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை. இதனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. வேலையில்லா திட்டத்தை தீர்ப்பதற்கான திட்டங்களோ, அறிவிப்புகளோ பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

நம்நாட்டில் இருந்து வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால், நமது பணம் அதிகமாக வெளியேறி வருகிறது. இதனால் பங்குச்சந்தை உள்ளிட்ட முதலீடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

பற்றாக்குறையை குறைக்க பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 80,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், எந்த வகையில் இது செய்யப்படும் என தெரிவிக்கப்படவில்லை. சொத்தை விற்று கடனை அடைக்கும் இதுபோன்ற செயல் ஆரோக்கியமானதல்ல’’ என்று கூறியுள்ளார்.

More News >>