உயிராக நினைத்த சமையல் தொழிலை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தது ஏன்? மனம் திறந்த மெஹந்தி சர்க்கஸ் நாயகன்

சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களை பெற்றிவிட்டது. காரணம் படத்தின் மனதை வருடும் இசை. இந்த படத்துக்கு ராஜு முருகன் கதை எழுதியுள்ளார் என்பதும் படத்தின் மீது ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம். மேலும் இந்த படத்தின் மூலம் நாயகனாக மாதம்பட்டி ரங்கராஜ், நாயகியாக ஸ்வேதா திரிபாதி ஆகியோர் அறிமுகமாகின்றனர். வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே. விக்னேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

 ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அந்தப் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  கதாநாயகனுக்கும், சர்க்கஸ் தொழில் செய்துவரும் கதாநாயகிக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி கதை உருவாகி இருக்கிறது. படம் வெளியாவத்கற்கு முன்பே பாடல்கள் வாயிலாக இந்த அழகிய காதலை நம் கண் முன் காட்டிவிட்டார் ஷான் ரோல்டன்.  

இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் பிஸ்னஸில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ளார்.

கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் இந்த ரங்கராஜ். இவர் சிறுவயதில் அரசு பள்ளியில் கொடுத்த மதிய உணவைதான் சாப்பிடுவார். பல்வேறு ஏழைக் குழந்தைகளின் பசியை ஆற்றும் அந்த உணவை அவர் கடவுளாகவே பார்த்தார். அதனை சமைத்து பரிமாறுபவர்கள் மீது அவருக்கு பெரிய மரியாதை ஏற்பட்டது. சமையல் கலை மீது தீராத காதல் ஏற்பட்டது.  கல்லூரி யில் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டிப்ளோமை முடித்தார். பொதுமக்களுக்கு சேவைகளை ஈட்டும் வகையில் தனது தந்தையின் வர்த்தகத்தை எடுத்து கொண்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா அளவில் மக்களிடையே பசிகளை ஆற்றினார். அவரின் சேவையை பாராட்டி விருதுகளை பெற்றுள்ளார். தனக்கு பிடித்த சமையல் கலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வர என்னக் காரணம் என்பதை மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று படத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய  மாதம்பட்டி ரங்கராஜ் " எல்லோரும் ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும்? என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்று தான். என்னைச் சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி. இந்தப்படத்தை வெளியீடும் சக்திவேல் எப்படியும் இந்தப்படம் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் காதலி பரிதாபங்கள்… முன்னாள் காதலன் திருமணத்தில் மணக்கோலத்தில் வந்து கலாட்டா செய்த இளம்பெண்!

More News >>