`மாற்றம் வரவேண்டும்.. தேர்தல் குறித்து ஜி.வி.பிரகாஷ் ஓபன் டாக்

நடிகரும் இசையமைப்பாளருமான  ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பொதுவெளியில் சமூக பிரச்னைகள் பற்றி பேசிவருகிறார். வரப்போகும் தேர்தல் குறித்து  இன்று பேசியிருக்கிறார்.

கோடை வெயிலுக்கு மத்தியிலும்  அரசியல் கட்சிகள் காரசார பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியல் களம் தலைக்கீழானது. மிகப் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டது. மாற்றம் வரவேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷும் அதனை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.வி.பிரகாஷ், ``சினிமாவில் பெண்களை தவறாக சித்தரிப்பதும் அவர்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது. அதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி சொல்லி தர வேண்டும். வெளிநாடுகளில் உள்ளது போல் தமிழக அரசு பள்ளிகளில் பாலியல் கல்வியை கொண்டு வரவேண்டும்.

இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்களை பற்றி தெரிந்துகொண்டு நல்லவர்களுக்கு வாக்களியுங்கள். மாற்றம் வரவேண்டும் என் விருப்பம்’’ என்றார்.

 

ஜெயலலிதா மரணத்தில் ‘மர்ம முடிச்சுகள்’ ஓபிஎஸ் ஆஜரானால் உண்மை 'புலப்படும்'

More News >>