ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை: மன அழுத்தம் காரணமா..?

கியூபாவின் புரட்சியாளரும் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் ஃபிடல் காஸ்ட்ரோ டையஸ் பலார்ட் என்பவர் மன அழுத்தத்தின் காரணமாக இன்று காலை தற்கொலை செய்துகொண்டதாக கியூபா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

’ஃபிடிலிட்டோ’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஜூனியர் ஃபிடல் காஸ்ட்ரோ சில மாதங்களாக மன அழுத்தத்தின் காரணமாக அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

68 வயதாகும் ஜூனியர் ஃபிடல் காஸ்ட்ரோ தனது மன அழுத்தம் பிரச்னை தொடர்பாக சில காலம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். சமீப காலமாக அவரது வீட்டுக்கே வந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை அதீத மன அழுத்தத்தின் காரணமாக ஜூனியர் ஃபிடல் காஸ்ட்ரோ தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை க்யூபாவின் அனைத்து ஊடகங்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன.

More News >>