ஏ.ஆர்.முருகதாஸ் கதைக்கு ஓகே சொன்ன த்ரிஷா.. காரணம் என்ன தெரியுமா
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ள கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை த்ரிஷா. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் இயக்கவிருக்கிறார்.
ஜெய், அஞ்சலி நடிப்பில் வெளியான படம் எங்கேயும் எப்போதும். இப்படத்தை சரவணன் இயக்கினார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிவர். எங்கேயும் எப்போதும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது.
சமீபத்தில் ஏற்பட்ட சாலை விபத்தினால் ஓய்வில் இருக்கும் சரவணன், மீண்டும் இயக்கத்திற்கான பணிகளில் இருக்கிறார். அவருக்காக ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி வைத்திருக்கும் கதை ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த கதை கேட்டு பிடித்து போக, த்ரிஷாவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். த்ரிஷா ஒப்புக் கொள்ள முக்கிய காரணம், அது சோலோ ஹீரோயின் திரைப்படம் என்பதே. கூடுதல் தகவல் என்னவென்றால், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.