ஜூலையில் தொடங்கும் மணிரத்னத்தின் `வானம் கொட்டட்டும் படபப்பிடிப்பு

மணிரத்னம் தயாரிப்பில் உருவாக இருக்கும் வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது.

சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அருண்விஜய் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘செக்க சிவந்த வானம்’. இப்படத்தை முடித்த கையோடு இரண்டு புராஜெக்டுகளை கையில் எடுத்தார் மணிரத்னம். ஒன்று, பொன்னியின் செல்வன் படத்தை திரைப்படமாக உருவாக்கும் பணி. மற்றொன்று வானம் கொட்டட்டும் என்கிற படத்தை தயாரிக்கும் பணி.

பொன்னியின் செல்வன் படத்துக்கான நடிகர்கள் தேர்வு ஒரு பக்கம் நடந்துவருகிறது. இந்நிலையில் படைவீரன் பட இயக்குநர் தனா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் மணிரத்னம் தயாரிக்கும் படம் தான் வானம் கொட்டட்டும். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தில் நாயகியாக மடோனா சபாஸ்டியன் ஒப்பந்தமாகியுள்ளார். தவிர, விக்ரம்பிரபுவுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். முன்னர், ஜீ.வி.பிரகாஷ் தான் நாயகனாக நடிக்கவேண்டியது. அவர் தேதி ஒதுக்குவதில் சிக்கல் நீடித்ததால், விக்ரம்பிரபு ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். மணிரத்னமும், தனாவும் இணைந்தே படத்துக்கான கதை, திரைக்கதைகளை எழுதியுள்ளனர்.

 

More News >>