437 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக - இந்த தேர்தலில் தான் அதிகம்

பாஜக வரலாற்றில் கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் தான் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டு சாதனை படைக்கிறது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 437 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கட்சி தொடங்கி முதன்முதலாக 1989-ல் மக்களவைத் தேர்தலை சந்தித்தது. அப்போது இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே அக்கட்சிக்கு செல்வாக்கு இருந்ததால் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. தொடர்ந்து 1991, 1996, 1998, 1999 பொதுத் தேர்தல்களில் படிப்படியாக வளர்ந்து 1998-ல் அதிமுக போன்ற கூட்டணிக் கட்சிகள் தயவில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சியையும் கைப்பற்றியது. ஆனால் அதிமுக காலை வாரிவிட அந்த ஆட்சி 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது.

1999-ல் 339 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட பாஜக மீண்டும் கூட்டணி அரசை வாஜ்பாய் தலைமையில் அமைத்தது.இந்த முறை திமுக, சிவசேனா, தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளின் தயவில் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் வரை நீடித்தது.

பின்னர் 2004-ல் 364 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக மண்ணைக் கவ்வியது. இதற்குக் காரணம் காங்கிரஸ் கூட்டணிக்கு திமுக தாவியது தான். அடுத்து 2009-ல் நடந்த தேர்தலில் கிட்டத்தட்ட நாடு முழுமைக்கும் வளர்ந்து விட்ட பாஜக, அதிகபட்சமாக 433 தொகுதிகளில் போட்டியிட்டாலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்தது.

அடுத்து 2014 -ல் 428 தொகுதிகளில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.நனட பெற உள்ள இந்தத் தேர்தலில், தெலுங்கு தேசம், அசாம் கண பரிஷத் போன்ற கட்சிகள் பாஜகவுடனான கூட்டணியை உதறி விட்டதால் 437 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. இது தான் பாஜக ஆரம்பித்த காலம் முதல் அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிடுவதாகும்.

More News >>