எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது - செம அப்ஸெட்டில் சூர்யா
சூர்யாவைச் சுற்றி நடக்கும் குளறுபடிகளால் மிகுந்த கவலையிலும், கடுப்பிலும் இருக்கிறாராம் நடிகர் சூர்யா.
சூர்யாவுக்கு இரண்டு படங்கள் ரிலீஸூக்கு தயாராகிவிட்டது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அரசியல் திரைப்படம் என்.ஜி.கே. இப்படம் கடந்த தீபாவளிக்கே வெளியாக வேண்டியது. செல்வராகவனுக்கு சூர்யாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடால் ரிலீஸ் தள்ளிப்போய் இன்னும் வெளியான பாடில்லை. சொன்ன நேரத்துக்குள் செல்வராகவன் படத்தை முடிக்கவில்லை என்கிற வருத்தத்தில் இருக்கிறார் சூர்யா.
அதுபோல, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் காப்பான் படமும் முடிந்துவிட்டது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சயிஷா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படமும் முடிந்துவிட்டது என்றாலும், பட தயாரிப்பு தரப்பான லைகா நிறுவனம் ரிலீஸ் செய்வதைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் இருக்கிறது. ஏனெனில் பல படங்களை லைகா தயாரித்து வருவதால் அவர்களும் பண நெருக்கடியில் இருக்கிறார்களாம். அது காப்பான் படத்தை பாதிப்பதால் செம கடுப்பில் இருக்கிறார் சூர்யா.
இன்னொரு சம்பவம் என்னவென்றால், சமீபத்தில் சூர்யாவின் 38வது படமான இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பட பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. இப்படப்பிடிப்புக்கான யூனிட் கர்நாடகாவிலிருந்து வந்திருக்கிறது. இதை அறிந்த தமிழக சினி யூனிட்டினர் சூர்யாவின் ஷூட்டிங் பகுதிக்கே சென்று பிரச்னை செய்திருக்கிறார்கள். உள்ளூரில் யூனிட் இருக்கும் போது வெளியூரில் இருந்து கொண்டு வர என்ன காரணம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் இப்படி வெளி மாநிலத்தில் இருந்து யூனிட் வந்த விசயமே சூர்யாவுக்கு தெரியாது என்பதே உண்மை. இதை அறிந்த சூர்யா, தனக்குத் தெரியாமல் தன்னைச் சுற்றி நிறைய குளறுபடிகள் நடப்பதால் அப்செட்டில் இருக்கிறார்.