நோ அரசியல்ல இறங்கலங்க...நட்புக்காக கை கொடுக்க வந்தேன்! சமுத்திரகனி
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார் சமுத்திரக்கனி.
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நட்சத்திர பேச்சாளர்கள், திரைத் துறை பிரபலங்கள் என தேர்தல் பிரசாரம் களைகட்டியிருக்கிறது. அதன் வகையில், மதுரை தொகுதி பிரசார களமும் சூடுபிடித்திருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரை தொகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இவரை ஆதரித்து, நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி வாக்கு சேகரித்து வருகிறார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சமுத்திரகனி, ‘அரசியலில் நான் இறங்கவில்லை; திமுக – கம்யூனிஸ்ட் கூட்டணிக்கும் நான் ஆதரவாக வரவில்லை, அரசியலுக்கு அப்பால் நெருங்கிய நண்பன் சு.வெங்கடேசன். மிகச் சிறந்த எழுத்தாளரும் கூட. அதனால், நண்பன் என்ற முறையில் ஆதரவு திரட்ட வந்தேனே தவிர வேறு ஒன்றும் இல்லை. தேர்தலில் வெங்கடேசன் வெற்றிபெற்றால் மதுரையில் மிகப்பெரிய மாற்றாம் உருவாகும்’ என்று கூறினார்.