மோடிக்கு ரஷ்யா வழங்கிய உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் விளாடிமிர் புதின்.

ரஷ்யாவின் மிகவும் உயரிய விருதாக ‘புனித ஆண்ட்ரூ’ விருது கருதப்படுகிறது. ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான உறவை சிறப்பாக மேம்படுத்தியதற்கான, அவரை கவுரவிக்கும் விதமாக ‘புனித ஆண்ட்ரூ’ எனப்படும் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்து உள்ளார். இதனை,  இந்தியாவில் உள்ள ரஷ்யத் தூதரகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மோடி எடுத்த நடவடிக்கைகளை பாராட்டியும் மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க மக்களிடம் ஊக்கப்படுத்தியது  போன்ற மோடி எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டி அண்மையில், ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்’ என்ற உயரிய விருதை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியது.

இந்நிலையில், மோடிக்கு ரஷ்யாவும் ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.

More News >>