என்ஜிகே படத்தின் தண்டல்காரன் பாடல் ரிலீஸ்!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள என்ஜிகே படத்தில் இடம்பெற்றுள்ள தண்டல்காரன் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் என்ஜிகே படம் விஜய்யின் சர்கார் படத்துக்கு போட்டியாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர், பொங்கல் ரேஸில் விஸ்வாசம் படத்துடனும் வெளிவராமல், நீண்ட இடைவெளி ஆகிவிட்டது.
அந்த இடைவெளியை வீணாக்காமல் நடிகர் சூர்யா கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தை நடித்து முடித்து விட்டார்.
விரைவில் வெளியாகவுள்ள என்ஜிகே படத்தின் அடுத்த அறிவிப்பை வெளியிட மாட்டார்களா என ட்ரீம் வாரியஸ் நிறுவனத்தை சூர்யா ரசிகர்கள் தொல்லைக் கொடுத்து வந்த நிலையில், அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், தண்டல்காரன் பாக்குறான்.. தண்டச்சோறு கேக்குறான் என்ற பாடல் லிரிக் வீடியொ வெளியாகி உள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகியுள்ள இந்த பாடலை ட்ரெண்டாக்கும் முயற்சியில் சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார்கள்.
தேர்தல் நேரம் என்பதால், அதற்கு ஏற்றார் போல இருக்கும் இந்த பாடல், பட்டித் தொட்டி எங்கும் வைரலாகும் என்பதில் சந்தேகமே இல்லை.