சோளிங்கர்,குடியாத்தம் தேர்தலை ரத்து செய்ய அதிமுக பிளான்... துரைமுருகன் வளைக்கப்பட்ட பகீர் பின்னணி!
திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் அந்த கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். தனது தொகுதி தொடர்பான அத்தனை; தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் செல்லப்பிள்ளை போல இருந்து வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலின் தன் மகன் கதிர் ஆனந்திற்கு வாய்ப்புக் கேட்டு திமுக தலைமையிடம் விண்ணப்பித்த போது சிறிது தயக்கத்துடன் தான் திமுக கதிர் ஆனந்தை வேட்பாளர் ஆக்கியது. ஏனென்றால், வேலூர், காட்பாடி பகுதி திமுகவினரே கதிர் ஆனந்திற்கு எதிராக இருந்தனர்.
கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் துரைமுருகன் கட்சியினரை சரிக்கட்டினார். கதிர் ஆனந்தை எதிர்த்து நிற்கும் ஏ.சி சண்முகம் பண ரீதியாக துரைமுருகனை விட வலிமையானவர். சாதி செல்வாக்கு பெரிதாக இல்லாத போதும் பணத்தை தண்ணீராக செலவு செய்கிறவர். துரைமுருகன் காட்பாடியைத் தாண்டி வேலூர் மக்களுக்கு பெரிதாக எதையும் செய்தவரில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்தை வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிகள் பங்கிடும் நிலையில், தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் இரண்டு தொகுதிகள் வேலூர் மாவட்டத்திற்குள் வருகிறது. இதில் காலியாக உள்ள சோளிங்கர், குடியாத்தம் இரண்டு தொகுதிகள் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது.
காலியாக உள்ள 22 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் ஒன்று போல சேர்ந்து வருவது வேலூரில் மட்டுமே. 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வென்றால் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்து சூழல் உருவாகி இருக்கும் நிலையில், இந்த இடைத்தேர்தல்களை ரத்து செய்யும் சூழலை உருவாக்குவதே அதிமுகவின் நோக்கம் என்கிறார்கள். திமுகவின் பொருளாளரே வாக்குக்கு பணம் கொடுக்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்கி நாடாளுமன்ற தேர்தலை வேலூர் தொகுதியில் ரத்து செய்து விட்டு. வேலூர் மாவட்டத்தில் இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலையும் ரத்து செய்தால் 22 தொகுதிகளுக்கும் தடை கேட்கலாம் என நினைக்கிறார்கள்.அதிமுகவினர். ஆனால் இதை ஏ.சி. சண்முகம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏ.சி. சண்முகம் பணத்தை தண்ணீர் போல செலவு செய்கிறார். துரைமுருகனோ முடக்கப்பட்டிருக்கிறார்.
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்து விட்டால் நாடாளுமன்ற தொகுதியில் ஏ.சி. சண்முகம் வெற்றி பெறுவார். தகுதி நீக்கத்தை வைத்தே சட்டமன்ற இடைத்தேர்தலையும் ரத்து செய்ய முடியும். இப்படிப் போகிறது துரைமுருகன் சுற்றி வளைக்கப்பட்டுள்ள விவகாரம். இப்போதைக்கு துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளும் காவல்துறையும் வேலூர் தொகுதி தொடர்பாக ஆலோசித்து வருகிறார்கள். இன்னும் இரு நாட்களுக்குள் வேலூரை மையமிட்டு பரபரப்புகள் கிளம்பலாம்.