சுவையான சுண்டக்காய் வத்தல் குழம்பு ரெசிபி

அசத்தலான சுவையில் சுண்டக்காய் வத்தல் குழம்பு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 15

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

சீரகத்தூள் - 2 டீஸ்பூன்

மல்லித்தூள் - அரை டீஸ்பூன்

சுண்டக்காய் வத்தல் - ஒரு கப்

உளுந்து - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

வெந்தயம் - கால் டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

புளி - ஒரு சிறிய அளவு

பூண்டு - 5

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அத்துடன் இடித்த பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.

பிறகு, சுண்டக்காய் வத்தல் சேர்த்து வதக்கவும்.

அத்துடன், பெருங்காயம், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

தற்போது, கரைத்து வைத்த புளிக் கரைசல் மற்றும் கூடுதலாக தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.

அவ்ளோதாங்க.. சாதத்திற்கு ஏற்ற சுவையான சுண்டக்காய் வத்தக்குழம்பு ரெடி..!

More News >>