வருவார்... வந்துருவார்...சமாளிக்கும் பிரேமலதா

விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார் என்று அவரது மனைவியும், தே.மு.தி.க.வின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

உடல் நலக் குறைவால் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பிரசாரம் செய்ய விஜயகாந்த் வருவார் என தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை விஜயகாந்த் வரவில்லை.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் வெளியாகி கொண்டிருக்கும் கருத்து கணிப்புகள் உண்மையான கருத்துக்கணிப்புகள் இல்லை. 40 தொகுதிகளிலும் எங்க கூட்டணி வெற்றி பெறும்.விஜயகாந்த் நிச்சயமாக பிரசாரத்துக்கு வருவார். அவர் எப்போது வருவார் என்ற அறிவிப்பு இன்னும் 2 நாளில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வருவார்... வந்துருவார்...சமாளிக்கும் பிரேமலதா, தே.மு.தி.க., விஜயகாந்த், பிரேமலதா, தேர்தல் பிரசாரம்- premalatha d.m.d.k., vijayakanth, premalatha,

More News >>