3வது மாடியிலிருந்து 5 வயது சிறுவனை தள்ளிவிட்ட அமெரிக்க இளைஞர் கைது
அமெரிக்காவின் மினிசோட்டா நகரில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மாலான மால் ஆஃப் அமெரிக்காவின் 3- வது மாடியிலிருந்து 5 வயது சிறுவனை தள்ளிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெள்ளியன்று, மக்கள் அதிகம் கூடியிருந்த நேரத்தில் 3-வது மாடியில் இருந்து 5 வயது சிறுவன் கீழே விழுந்துள்ளான். மாலில் அந்த காட்சியை நேரடியாக பார்த்த பொதுமக்கள் சிலர், இளைஞர் ஒருவர் தான் அந்த சிறுவனை தள்ளி விட்டதாகக் கூறினர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக வந்த மினிசோட்டா போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனை மருத்துவனைக்கு கொண்டு சேர்த்தனர். சிறுவனை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இம்மானுவேல் தேஷாவன் அராண்டா(24 வயது) மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து மினிசோட்டா போலீசார் கைது செய்தனர்.