பிரகாஷ்ராஜுக்கு விசில் அடிப்பேன்- நடிகர் விஷால்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு விசில் அடிப்பேன் என நடிகர் விஷால் கூறினார்.

பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகர் மட்டுமல்ல, பொறுப்பான சமூக அக்கறை உள்ள மனிதர். சமீபகாலமாக மத்திய பா.ஜ. அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் மக்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்தார். சொன்னபடி, கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார். தற்போது அந்த பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் அவருக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: தற்போதைய அரசியல் சூழலில் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி வெற்றி பெறுவது என்பது சாதரண விஷயம் இல்லை. அதுக்கு நிறைய தைரியம் வேண்டும்.

சமுதாயத்தில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் வேண்டும். அந்த வகையில் சரியான வேட்பாளராக என் அண்ணன் பிரகாஷ்ராஜ் உள்ளார். சமூகத்தில் நடக்கும் நல்ல விஷயத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பார், கெட்ட விஷயங்களை தைரியமாக சுட்டிக்காட்டுபவர். இந்த தேர்தலில் வெற்றி பெற அவருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது.

பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். நான் அவருக்கு விசில் போடுவேன். மக்களும் கண்டிப்பாக விசில் அடிப்பாங்க. அண்ணா நீங்க நினைத்தப்படி, இந்த தேர்தலில் வெற்றி பெற்று உங்க தொகுதிக்கு நல்லது செய்வீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

More News >>